அனைத்து தரப்பினருக்கும் எதிராக கல்வியமைச்சு செயற்படுகின்றது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 14, 2017

அனைத்து தரப்பினருக்கும் எதிராக கல்வியமைச்சு செயற்படுகின்றது(இரட்டைப் பாதை நிருபர்)

தற்பொழுது இலங்கையின் நல்லாட்சியில் அனைத்து தரப்பினரும் சமனாக

மதிக்கப்படுகின்றார்கள் என்று அரசாங்கமும் அமைச்சர்களும் கூறினாலும் அதற்கு

எதிர்மாறாக மத்திய மாகாண முதலமைச்சரும் மத்திய மாகாண கல்வி அமைச்சும்

செயல்படுகின்றதோ என்ற சந்தேகம் எனக்கு எழுகின்றது என மத்திய மாகாண சபை உறுப்பினர்

ஆர்;.ராஜாராம் நேற்று (13.07.2017)ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


அண்மையில் ஹட்டன் கெப்ரியல் பெண்கள் பாடசாலையின் தமிழ் பிரிவிற்கு விஜயம் செய்து

அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்ட பின்பே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இந்த பாடசாலையின் பெரும்பான்மையினர் கல்வி கற்கின்ற பகுதி மிகவும் அழகாகவும் அனைத்து

வசதிகளுடனும் இயங்குகின்றது ஆனால் இதன் தமிழ் பகுதி மிகவும் மோசமாகவும் மாட்டுக் குடிலை

போலவும் இருக்கின்றது.இங்கிருக்கின்ற வகுப்பறைகளில் இருந்து கல்வி கற்கின்ற

மாணவிகளுக்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்க வேண்டும்.வகுப்பறைகளில் துர் நாற்றம்

வீசுகின்றது.

ஏலிரூபவ்பாம்புரூபவ்நாய் எச்சங்கள் வகுப்பறைகளில் இருக்கின்றது.தற்பொழுது நாடுமுழுவதும் டெங்கு

காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகின்றது.; இங்கிருக்கின்ற மாணவிகளுக்கு மிக விரைவில்

பறவுகின்ற அபாயமான ஒரு நிலை இருக்கின்றது.இங்கு கல்விபயில்கின்ற மாணவிகள்

தமிழர்கள் என்பதால் இவ்வாறு பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்களோ என்று என்னத்

தோன்றுகின்றது.

ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற இந்த பாடசாலையானது எப்படி இவ்வாறு இரண்டு விதமாக

நடாத்தப்படுகின்றது.எனவே நிர்வாகம் திட்டமிட்ட அடிப்படையில் இதனை செய்கின்றது என்பது

தெளிவாக தெரிகின்றது.ஆனால் இவர்கள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்

பெற்றோர்கள் பொறுமையாக இருக்கின்றார்கள் என்பதற்காக இவர்கள் எதனையும் செய்ய

முடியாது.அந்த பொறுமைக்கு எல்லை இருக்கின்றது.

பாடசாலையில் வேறுபாடுகள் காட்டக்கூடாது என்பதற்காகவே அனைவரும் ஒரே நிறத்தில் உடை

அணிகின்றார்கள்.ஆனால் அது உடைக்கு மட்டும் இந்த பாடசாலையில் மட்டுப்படுத்தப்படடிருப்பது

மிகவும் வேதனைக்குறிய ஒரு செயலாகும்.வகுப்பறைக்குள் பாம்புகள் அடிக்கடி வந்து செலவதாக

அங்கிருக்கின்ற மாணவிகள் என்னிடம் தெரிவித்தார்கள்.மாணவிகளே என்னை அழைத்துக் கொண்டு

சென்று அங்குள்ள நிலைமைகளை காட்டினார்கள்.அவர்கள் கண்களில் கண்ணீர் மல்க இந்த விடயங்களை

என்னிடம் கூறினார்கள்.எனவே நான் இது தொடர்பாக உடனடியாக கல்வி இராஜாங்க அமைச்சரின்

கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவர் இந்த பாடசாலைக்கு புதிதாக மூன்று மாடி கட்டிடம்

ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறியிருக்கின்றார்.எனவே உடனடியாக இந்த

தமிழ் பிரிவு முழுமையாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும்

குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad