நுவரெலியாவில் 30 மரக்கறிக் கடைகள் உடைப்பு (படங்கள்) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, January 30, 2017

நுவரெலியாவில் 30 மரக்கறிக் கடைகள் உடைப்பு (படங்கள்)


கண்டி நுவரெலியா பிரதான பாதையில் லபுக்கலை வெஸ்டடோ தோட்ட  பிரதேசத்தில் சுயதொழில் நோக்கம் கருதி நடத்தபட்டு வந்த மரக்கறிகடைகள் 30 விதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினால் உடைத்து அப்புறப்படுத்தபட்டள்ளது. இந்த மறக்கறி வியாபாரிகளில் 10 தொடக்கம் 20 வருடங்களாக இப்பிரதேசத்தில் தற்காலிகமாக இந்த வியாபாரத்தை மேற்க் கொண்டு வருகின்றனர். நுவரெலியா வந்து செல்லும் பெரும்பாலான உள்நாட்டு உல்லாச பிரயாணிகள் இவர்களிடமே மரக்கறி கொள்வனவு செய்வது வழக்கம்.


இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியிலாளர் சம்பத் சமரநாயக்க (0714484014) அவர்களிடம் வினவிய போது. நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த கடைகளை அகற்றுவதற்கு தீர்மானம் மேற்க் கொள்ளபட்டது. அதற்து அமைய கொழம்பில் உள்ள எமது தலைமை காரியாலயத்திற்கு அறிவித்து உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு அமைய பொலிஸாரின் பாதுகாப்புடன் இந்த கடைகள் அகற்றபட்டன.

இருந்தும் இவர்களுக்கு தற்காலிக கடைகள் அமைப்பதற்கான வசதிகளும் மேற்க் கொள்ளபட்டு;ள்ளன. போக்குவரத்துற்கு இடஞ்சல் இல்லாத வகையில் கடைகள் அமைக்கபடும். தற்போது இந்த கடைகள் போக்குவரத்தற்கு இடஞ்சலாகவும். சூழலை மாசுபடுத்தும் வகையில் காணப்படுகின்றது இதனாலயே இந்த கடைகள் அகற்றபட்டது என்று கூறினார்.
No comments:

Post Top Ad