இன்று முதல் மேலதிக வகுப்புக்களுக்க தடை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 19, 2015

இன்று முதல் மேலதிக வகுப்புக்களுக்க தடைபுலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்கு இன்று (19) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைகள் முடியும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள பரீட்சையினை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என அனைத்தும் இன்று நள்ளிரவிற்கு பின்னர் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பரீட்சைகள் திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 

பரீட்சைக்கான மாதிரி வினாதாள்களை அச்சிடுவது, அவற்றை விநியோகிப்பது , போலியான பரீட்சை வினாத்தாள்களை விநியோகித்தல், பரீட்சை வினாபத்திரத்தில் உள்ள கேள்விகளை தருவதாக சுவரொட்டிகள், பதாதைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post Top Ad