முக்கிய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் தேர்தல் வாக்களிப்பில்-படங்கள். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, August 17, 2015

முக்கிய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் தேர்தல் வாக்களிப்பில்-படங்கள்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய கட்சிகளிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலத்திலும் இஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பொறியியலாளர் சிப்லி பாரூக் காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலத்திலும்இநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையிலும்இஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி ஏ.ஏ.எம்.றூபி காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் பாலர் பாடசாலையிலும்இமக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் எம்.ஆர். றவூப் பாலமுனை அலிகார் வித்தியாலகத்திலும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

மேற்படி பொதுத் தேர்தலில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதோடு
மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  3 இலட்சத்து 65 ஆயிரத்து 167 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad