மட்டு மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்புடன்- 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு.(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, August 17, 2015

மட்டு மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்புடன்- 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு.(படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று 16 ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.


அத்தோடு வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உட்பட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளுடன் வாக்களிப்பு நிலைய தேர்தல் அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் உரிய நிலையங்களை சென்றடைந்துள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்இ மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி. பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்இ மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் செயலகத்தின் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் உட்பட தேர்தல் செயலகத்தின் அதிகாரிகள் வருகைதந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களில் நாளை 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற இருக்கின்றது.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி 199 இ கல்குடா தேர்தல் தொகுதி 115 இபட்டிருப்பு தேர்தல் தொகுதி 100 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

மேற்படி பொதுத் தேர்தலில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதோடு
மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  3 இலட்சத்து 65 ஆயிரத்து 167 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad