வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, August 17, 2015

வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவு


இலங்கையின் 15ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தன.
தற்போது வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள், வாக்கென்னும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகின. 2015ஆம் ஆண்டுகான பொதுத்தேர்தலுக்காக 35 அரசியல் கட்சிகளிலிருந்தும் 200 சுயேட்சை குழுக்களிலிருந்தும் மொத்தமாக 6,151 வேட்பாளர்கள், 196 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர்.
இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியில் 12,314 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டதுடன் இவற்றுள், வட மாகாணத்திலுள்ள 7 சிறுதீவுகளும் உள்ளடங்குகின்றன.
தேர்தல்கள் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் 15,440,491 மக்கள் இம்முறை வாக்களிப்புக்கு தகுதிபெற்றிருந்தனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 70,549 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன் 4,825 விசேட அதிரடிப்படையினரும் 7,000 சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post Top Ad