மஹிந்த வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 09, 2015

மஹிந்த வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபடியான விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றிற்குள் பிரவேசித்து பிரதமர் பதவியை வழங்குமாறு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post Top Ad