அதிகார மோகமும் அரசியல் பதவியும் ..!! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 08, 2015

அதிகார மோகமும் அரசியல் பதவியும் ..!!உலக வாழ்க்கை  என்னும் மாளிகைக்கு பொருளும்இமதிப்பும் அத்திய அவசியமான இரண்டு தூண்கள் பொருளை உடைமை ஆக்கிக் கொண்டு அதன் மீது உரிமையை நிலை நாட்டும்போது அதை செல்வ நிலை எனக் குறிப்பிடலாம்இ மனித உள்ளங்களை வசப்படுத்திக் கொண்டு அவற்றின் மீது செலுத்தும்போது அதை பதவி என்று குறிப்பிடலாம் .


பெரும்பாலான தலைவர்களால் இ பதவி என்பது அதிகாரம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது .ஆனால் பதவி என்பது ஓர் அங்கீகாரமும் பொறுப்பும் ஆகும்.அதிகாரம் இபுகழ் இசெல்வம் ஆகிய காரணத்திற்காகவே அதிகமான தலைவர்களால்  பதவிக்காக ஆசைப் படுகிறார்கள்.இம்மூன்று அம்சங்களையும் சரியான முறையில் பயன்படுத்தப் படுமேயானால் பதவியை எவரும் விரும்பமாட்டார்கள்.

இந்த மூன்று அம்சங்களை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால்தான் மக்கள் பதவிக்காக போட்டி போடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. மறுமையை நம்பாத மக்கள் தான் தமக்கு கிடைக்கும் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பதவியை தவறாக பயன்படுத்தினால் இதற்காக மறுமையில் கேள்விக் கேட்கப்படும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடிய முஸ்லிம்கள்களும் பதவியை வைத்து தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதுதான் மிகவும் வேதனைக்குரியது.

ஹஜ்ரத் அபூதர்(ரலி)கூறுகிறார்கள்: நான் யாரஸூலல்லாஹ்!தாங்கள் என்னை (ஏதாவதொரு பகுதிக்கு)ஆட்சிப்பதவியில் நியமனம் செய்யக்கூடாதா? என்று கேட்டேன்.
அதற்கு நபியவர்கள் தங்கள் கரத்தால் என் தோள்பட்டையில் அடித்துவிட்டு ஓ அபூதரே! நிச்சயமாக ஆட்சிப்பதவி என்பது ஓர் அமானிதம் (நம்பிக்கைக்குரிய பொறுப்பு) ஆகும். உலகில் அதற்கு அதிக மதிப்பு இருந்தபோதிலும் கியாமத் நாளில் அது இழிவும்இ கைசேதமும் ஆகும்; யார் பொறுப்பினை சுமந்து அதன் கடமையை சரிவர நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்குத்தவிர. (முஸ்லிம்)

மனிதன் சிறந்த படைப்பாக இருப்பினும் மனிதனின் உள்ளத்தில் பணம்இ பதவியின் மீதான ஆசை மிக அதிகமாகி விடும்போது அவன் மிருகமாக மாறி விடுகிறான். பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்து விடுவது போல பதவிக்காக பல சதித் திட்டங்களை வகுக்கிறான். இன்றைய நாளிதழ்களை படித்தாலே அதில் பெரும்பகுதி அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் விமர்சிக்கும் செய்திகள் தான் அதிகம் உள்ளது. எல்லாம் பதவிக்காகத் தான். குறிப்பாக ஃபிர்அவ்னாக செயல்படும் இ தலைவர்கள அவனது பாசிச கும்பலும் பதவிக்காக செய்யும் தந்திரங்கள் எத்தனையோஇபதவி பறிபோய் விடும் என்ற பயத்தால் பல்லாயிரக்கணக்கான ஆண்குழந்தைகளை கொன்று குவித்த ஃபிர்அவ்ன்

இராக்கில் இருந்து ஒரு குழுவினர் உமர் ரழி அவர்களை சந்திக்க வந்தனர். அதில் அஹ்னஃபும் இருந்தார். அப்போது உமர் ரழி அவர்கள் கடும் கோடை காலத்தில் இடுப்பில் ஆடையை கட்டிக் கொண்டு சதகாவுடைய ஒட்டகத்தின் உடம்பில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து தடவிக் கொண்டிருந்தார்கள் மருந்து போடுவதற்கு தோதுவாக ஒட்டகத்தை படுக்க வைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால் உதவிக்கு அஹ்னஃபை அழைத்த போது அங்கிருந்த ஒருவர் கேட்டார் அமீருல் முஃமினீன் அவர்களே !

இது போன்ற வேலைக்கு பணியாளர்களை ஏவலாம் அல்லவா ? நீங்களே ஏன் சிரமப்படுகிறீர்கள் என்று கேட்கஇ அதற்கு உமர் ரழி அவர்கள் நான் தானே மக்களின் பணியாளன். என்னை விடஇ மேலும் இந்த அஹ்னஃபையும் விட பணியாளர்கள் யார் ? என்று கூறிஇ எவர் மக்களின் தலைவராக பொறுப்பேற்றாரோஇ அவர் அந்த மக்களின் அடிமை பணியாளர் ஆவார். என்றார்கள்.

மதிப்புஇமரியாதையை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லாமல் இருக்க மாட்டார்கள் இதலைவர்கள்  மக்களின் சமூகத்தின் பணியாளர்களே தவிரே ஆடம்பரம்இஅந்தஸ்துஇமாளிகைக்காக ஆசைப்படுகின்ற பணக்காரர்கள் அல்லர் இபதவி மோகம் வருவதற்கான அடிப்படை தன செயலை பிரபால்யப்படுத்த வேண்டும் அல்லது தான் ஒரு முக்கிய புள்ளியாக கருத வேண்டும் என்பதற்காக !

.திருக்குர்ஆனில் பல நபிமார்கள் செய்த ஆட்சி முறையையும் அவர்களுடைய பண்புகளையும் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுவதில் நமக்கு படிப்பினை இருக்கிறது.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே ஜனாதிபதியாக இருந்ததால் பதவி வகிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது. ஒருவர் ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சிதலைவராகவும் மிளிர முடியும் என்பதற்கு நபி (ஸல் ) அவர்கள் ஒரு மிகப் பெரிய முன்மாதிரியும் எடுத்துக்காட்டும் ஆவார்கள் .ஏனெனில் (ஆட்சியிலோ பதவியிலோ) அரசியலில் இருப்பவர்கள் மார்க்கத்தை எள்ளளவும் பேணுவதில்லை இ மார்க்கத்தை உயிராக கொண்டவர்களோ அரசியலில் பங்களிப்பு செய்வதில்லை .

அரசியலில் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற தவறான வாதத்தினால் எதையும் சாதிக்காமல் நமது சமுதாயம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது இ கண்டிப்பாக அல்லது தயவு செய்து மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் மார்க்கத் தலைவர்கள் அரசியலில் தங்களது பங்களிப்பை ஒவ்வொரு நாட்டிலும் செய்யவேண்டும் .மார்க்கத்தில் கொள்கை உறுதி கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள் .
பதவிக்கு வரும் முன் பணிவாகவும் இனிமையானவராகவும் இருப்பவர்கள் பதவி கிடைத்தவுடன் நேரெதிர் குணம் கொண்டவராக அதாவது புகழ் தரும் போதை அவரை ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது அவர் தன்நிலை மறந்தவராக ஆகி விடுகிறார் .

எத்தனை வரலாற்று சான்றுகளும்இஇதிகாசங்களும் நாம் சொல்லி கேட்டு இருந்தாலும் சிரியலவேனும் வாழ்வில் எடுத்து நடக்க முயட்சிப்பதுமில்லைஇபொதுவாக பதவிஇஅந்தஸ்து மோகம் கொண்டவன் மக்களோடு நெருங்கிஇஇரங்கி பேச கவனம் செலுத்த  மாட்டன் அவனுக்கு சுய இலாபம் கிடைக்குமாயின் அதற்கு தஹுந்த தருணம் பார்த்து பேசுவான் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்இ அதிகாரத்தைக் கேட்காதே! நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்’ என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)

Zuhair Ali(Ghafoori,PGD,MBA)

No comments:

Post Top Ad