மேர்வின் சில்வாவின் பெயரை நீக்குங்கள் ! மஹிந்தவின் கோரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 11, 2015

மேர்வின் சில்வாவின் பெயரை நீக்குங்கள் ! மஹிந்தவின் கோரிக்கை


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவில் உள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் பெயரை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னணியின் வேட்புமனுக்குழுவிடம் கோரியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரே இந்த கோரிக்கையை விடுக்குமாறு மகிந்தவிடம் கூறியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், மேர்வின் சில்வா, குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு சென்று பசில் மற்றும் கோத்தபாய ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்தமையே இதற்கு காரணம்.
அத்துடன் இவர்களுக்கு எதிராக மேர்வின் சில்வா, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்தார்.
மேர்வின் சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்ற நிலையில், ராஜபக்சவினர் அழுத்தம் காரணமாகவே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

No comments:

Post Top Ad