மூதூரின் அரசியல் வாக்குவாதங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 08, 2015

மூதூரின் அரசியல் வாக்குவாதங்கள்(ஊரோடி)

இலங்கையின் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து இன்று வரைக்கும் கடந்த சில நாட்களாக சந்திக்கு சந்தி வீட்டுக்கு வீடு தேர்தல் விவாதங்களும் வாக்கு வாதங்களும் தொடர்ந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அதிலும் முகப்புத்தகங்கள் போன்ற சமூக வலைத் தளங்களினூடாக இன்னும் இன்னும் அதிகரித்திருக்கிறது.


தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளிருந்து இன்று வரையிலும் அரசியல் கழுகுகளின் வாக்குச் சேகரிக்கும் சந்திப்புகளும் மூதூரின் பல இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பல மூதூர் இளைஞர்களின் மூளைகளை சலவை செய்து தங்களின் தேர்தல் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூதூர் தொகுதிக்கான வேட்பாளர் யார் ? என்ற கேள்வி மூதூரின் அனைத்து மக்களிடத்திலும் எழுந்திருக்கின்றது. ஆனாலும் இன்னமும் இதற்கான சரியான விடை தெரியாத பல இளைஞர்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். இதை சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கில் மூத்த அரசியல் கழுகுகள் மூதூர் மக்களின் வாக்குகளை வேட்டையாட புறப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மூதூருக்கென்று தேர்தலில் போட்டியிட்டு   2001ம் ஆண்டு களமிறங்கிய டொக்டர் திடீர் தௌபீக் பாரளுமன்ற உறுப்பினராக  தெரிவாகியமையே ஆகும். அன்றி அதற்கு முன்னரும் சரி அதற்கு பின்பும் சரி வேறு எவரும் மூதூரிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. இது மூதூர் மக்களுக்கு நடந்த மிகப் பெரும் அநீதி.

இது இவ்வாறு இருக்க மூதூரிலிருந்து மூதூர் மக்கள் விரும்புகின்ற அரசியல்வாதிகளுக்கு எந்த வகையிலும் இடமளிக்காது. தங்களின் சுயநலனுக்காக தாங்கள் விரும்பிய வேட்பாளர் கைப்பொம்மைகளை முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் பொதுத் தேர்தலில் களமிறக்கி இருக்கிறது. இதிலிருந்து தெரியவருவது யாதெனில் மூதூர் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் புறக்கனித்து விட்டது.

எனவே மூதூர் மக்களாகிய நாம் இப்பொழுதிலிருந்து விழித்துக் கொள்வோம்.
நாம் தெரிவு செய்யக் கூடிய அல்லது பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டிய அந்த வேட்பாளன் இப்படி இருக்க வேண்டும்.

1.மும்மொழிகளும் சரளமாக பேசுதல்.
2.மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று விசாரித்து பிரச்சினைகளை            தீர்க்கக் கூடிய ஆளுமை.
3.முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடப்படுகின்ற வன்செயல்களை , இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக பாராளுமன்றில் குரல் கொடுத்தல்.
4.சுயநலமின்றிய பொதுநலன்.
5.பணம் மீதும் பகட்டு வாழ்க்கை மீதும் மோகமின்மை.

இது போன்ற பல நற்குணங்கள் உடைய தைரியமான அரசியல்வாதி யாரென்று நீங்கள் அனைவரும் இனம் கண்டிருப்பீர்கள். இனம் காண வேண்டியது காலத்தின் தேவை. அன்றி நாம் இனம்காண தவறினால் மீண்டும் மீண்டும் மூதூர் மக்களை சாக்கடைக்குள் தள்ளுவதற்கு எத்தனிக்கின்ற அரசியல் கழுகுகளின் பசிக்கு நமது வாக்குகள் இரையாகிவிடும்.

எனவே சிந்தித்து செயலாற்றுங்கள்
வீண் வாக்குவாதங்கள் ஒரு பலனும் அளிக்கப்போவதில்லை.

No comments:

Post Top Ad