திருமலை மக்கேசர் மைதானம் ஒல்லாந்தர் காலத்து மயானம் ! காவல் துறை தெரிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 11, 2015

திருமலை மக்கேசர் மைதானம் ஒல்லாந்தர் காலத்து மயானம் ! காவல் துறை தெரிவிப்புதிருகோணமலை - மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி பழைய மயானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்கட் கிழமை முதல் அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ப ணிகளில் 14க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. 

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். 

நேற்றை தினமும் தொடர்ந்த இந்த பணிகளின் போது ஆறு மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்ய முற்படும் போது, அங்கிருந்து மனித எச்சம் ஒன்று மீட்கப்பட்டது. 

இதனை அடுத்து அதனை அகழ்வு செய்து ஆராயுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையிலேயே இந்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஒல்லாந்தர் காலத்தில் இந்த பகுதியில் மயானம் ஒன்று இருந்தமை தெரியவந்துள்ளதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

கிடைக்கப் பெற்ற தகவல்கள் மற்றும் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்து மேற்கு திசை நோக்கி புதைக்கப்பட்டிருந்தமை என்பன, அங்கு மயானம் ஒன்று இருந்துள்ளமையை உறுதி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் ஒல்லாந்தர் காலத்து நாணயங்களும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன. 

No comments:

Post Top Ad