நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி அனுமதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 11, 2015

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி அனுமதிநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி அனுமதி வழங்கியுள்ளது. 

பொரல்ல கெம்பல் மைதானத்தில் நடைபெறும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக் கூட்டத்திலேயே இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் யானைச் சின்னத்தில் ராஜித சேனாரத்ன உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ளனர். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்பு மனு வழங்கியதன் காரணத்தினாலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad