இணையத்தள தாக்குதல் அமெரிக்கா அதிர்ந்தது (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 10, 2015

இணையத்தள தாக்குதல் அமெரிக்கா அதிர்ந்தது (வீடியோ இணைப்பு)அமெரிக்காவின் பங்கு வர்த்தகம், விமானசேவை ஆகியவை நேற்று பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூயோர்க் பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் சேவைகள் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென நிறுத்தப்பட்டது.

மேலும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சேவை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் சுமார் 3.10 மணியளவில் மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டன.
இதேபோல் யுனைடெட் ஏர்லையின்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.
மேலும் அந்நிறுவனத்தின் கணனி அமைப்பு முறையில் கோளாறு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டன. விமானங்கள் புறப்படாததால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதே போல் பிரபல பொருளாதார செய்தி நிறுவனமான வால் ஸ்டிரிட் ஜெர்னலின் இணையதள முகப்பு பக்கமும் இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கும் கணனியில் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது இணைய தாக்குதலாக இருக்கலாம் என்று தகவல் பரவியது.
ஆனால் இதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தி தொடர்பாளார் ஜொஸ் ஏர்னெஸ்ட் கூறியதாவது, இந்த பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொழில் நுட்ப காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையாகவே இருக்கலாம்.
கண்டிப்பாக இணைய தாக்குதலின் பாதிப்பாக இருக்காது என்று கூறியுள்ளார். மேலும் இந்த இணைய பாதிப்பால் 3500க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post Top Ad