சுதந்திரக் கட்சியின் கோரிக்கை ஜனாதிபதியால் நிராகரிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 09, 2015

சுதந்திரக் கட்சியின் கோரிக்கை ஜனாதிபதியால் நிராகரிப்பு


தேசிய பட்டியலில் நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்மை மாவட்டங்களில் போட்டியிட வைக்காது தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர்கள் டளஸ் அழகபெரும, டிலான் பெரேரா ஆகியோர் தம்மை தேசிய பட்டியலில் நியமிக்குமாறு கோரியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி, அநுரபிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கட்சி வெற்றிபெறும் என எதிர்ப்பார்த்தால், கட்டாயம் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அத்துடன் நிமால் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, டளஸ் அழகபெரும ஆகியோர் தேர்தல் சவாலை எதிர்கொண்டு தமது மாவட்டங்களில் போட்டியிட்டு கட்சியை பெற்றி பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இந்த தலைவர்கள், மக்களால் தாம் நிராகரிக்கப்படுவோம் என்பதை அறிந்து தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வர முயற்சித்துள்ளதாக ஜனாதிபதியின் இந்த தீர்மானம் காரணமாக விருப்பம் இன்றியேனும் தமது மாவட்டங்களில் போட்டியிட வேண்டிய நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது.

No comments:

Post Top Ad