அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கிய நியமனங்கள் சட்டபூர்வமானது – தொழிற்ச் சங்கம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 09, 2015

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழங்கிய நியமனங்கள் சட்டபூர்வமானது – தொழிற்ச் சங்கம்(எம்.எஸ்.எம்.நியாஸ் - புல்மோட்டை)

    இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் புல்மோட்டை பொறித்தொகுதியில் மான்புமிகு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கப்பட்ட நியமனங்கள் சட்ட விரோதமென ஊடகங்களில் கூறப்பட்டமை உன்மைக்கு புறம்பானதுää வழங்கப்பட்ட எல்லா நியமனங்களும் சட்ட”ர்வமானது என அந்த நிறுவனத்தின் பலமான தொழிற்ச்சங்கமான ஜக்கிய வர்த்தக சங்கம் தெறிவிக்கின்றது.

                 சில நாட்களாக ஊடகங்களில் மான்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் சட்டவிரோத நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக உன்மைக்குப் புறம்பான செய்திகள் வெளிவந்தன இது தொடர்பாக  மேற்படி தொழிற்ச் சங்கத்தினால் ஊடக மறுப்பு அறிக்கையில் மேலும் குறிப்பிட்டவை கீழ் வருமாறு          
      இலங்கை கனிப் பொருள் மணல் லிமிட்டெட் இந்த நாட்டிற்கு இலாபமீட்டி கொடுக்கும் அரச நிறுவனங்களில் முதல் வரிசையில் உள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்போது சுமார் 160க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் இருக்கின்றன இந்த வெற்றிடங்களை ”ர்த்தி செய்வதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேன்டுகோளுக்கு இனங்க நிறுவனத்தின் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பத்தரிகைகளில் விளம்பரப்படுத்தி தகமையானவர்கள் நேர்முகப்பரீட்சை மூலம் தேர்வு செய்யப்பட்டு அப்பதவிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகமையானவர்களுக்கு வழங்கப்பட்டது.
      அதே நேரம் கொக்கிளாய் மற்றும் புல்மோட்டை பொறித்தொகுதியில் இருக்கின்ற தொழிலாளி வெற்றிடங்களை ”ர்த்தி செய்வதற்க்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நேர்முகப்பரீட்சை வைக்கப்பட்டு இந்த நிறுவனம் அமைந்துள்ள புல்மோட்டை மற்றும் அதனை அண்டிய பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு முண்னுரிமை வழங்கப்பட்டு அமைய தொழிலாளியாக 114 நியமனங்கள் வழங்கப்பட்டது. இது சட்ட ”ர்வமானதும் முறைப்படியும் வழங்கப்பட்ட நியமனங்கள் ஆகும்.
      கடந்த காலங்களில் குறிப்பாக முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலப்பகுதியில் 180க்கு மேற்ப்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள் இவர்களில் ஹம்பாந்தோட்டைää களுத்துறை மற்றும் வென்னப்புவ போன்ற பிரதேசங்களில் இருந்து மாத்திரமே தொழிலுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டனர் ஆனால்     புல்மோட்டை மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் முற்றாக புறக்கனிக்கப்பட்டனர். ஆனால் மான்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்கள் இந்த நிறுவனத்துக்கு அமைச்சராக வந்ததாலயே இது போன்ற அநீதிகள் நீக்கப்பட்டு புல்மோட்டை பிரதேச மக்களுக்கு முண்னுரிமை வழங்கப்பட்டு இன பேதம் பாராது  எல்லா இன மக்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது.
      கடந்த காலங்களில் குறிப்பாக முன்னால் தவிசாளர் டிசான் குனசேகரவின் இறுதிக் காலப்பகுதியில் எமது நிறுவனம் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது இதனால் வங்கி மேலதிகப் பற்று மூலம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுக் கொண்டிருந்நது.

      தற்போது மான்புமிகு அமைச்சர்; ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிறுவனம் இலாபமீட்டிக் கொண்டிருக்கின்றது. அதே நேரம் இங்குள்ள கனிய மணலின் பெறுமதியை கூட்டி கூடிய விலைக்கு விற்க்கின்ற செயல்த்திட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்நிறுவனம் அதிகூடிய இலாபம் ஈட்டுவதோடு மேலும் தொழில் வாய்ப்பு வழங்கக்கூடிய சந்தர்ப்பங்களும் வர இருக்கின்றது என மேற்படி தொழிற்ச் சங்கத்தினால் தெரிவிக்கப்படுகிறது.
      இந்த நிறுவனத்தில் சுமார் 450க்கு மேற்ப்பட்ட பணியாளர்கள் தற்போது கடமை புரிகின்றார்கள் இவர்களில் 230க்கு மேற்ப்பட்ட அங்கத்தவர்களை கொண்ட பலமான பிரதான தொழிற்ச்சங்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad