மஹிந்த என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 11, 2015

மஹிந்த என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன்
(vi)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் என முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார்.

கொழும்பு ஹோகன்தர பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மஹிந்த ராஜக்ஷவின் ஆட்சியில் அவரின் சதோர்களான பசில், கோத்தபாய ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.   மகன் நாமல் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக செயற்பட்டார்.
மேலும் உலகத் தலைவர்களின் வரலாற்றில் மஹிந்த ராஜபக்ஷவை போன்று இழிவான ஒருவர் எந்த நாட்டிலும் இருந்தது இல்லை. மஹிந்த ராஜபக்ஷ உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் மீண்டும் சாதரணதர பரீட்சைக்கு முகம்கொடுக்க போகின்றார்.
இவர் போன்று அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. நான் தேர்தலில் தோல்வியடைந்தால் அதன் பின்னர் போட்டியிட மாட்டேன் என்பதை இவ்விடத்தில் சத்தியம் செய்கின்றேன். 
அதாவது அரசியல் என்பது வியாபாரம் அல்ல. அது ஒரு மக்கள் சேவை. மக்கள் விரும்பும் வரை ஆட்சியில் இருக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் வீட்டுக்கு சென்று விவசாயம் தான் செய்யதான் வேண்டும்.
எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் அரசியலிருந்து ஓய்வு பெறுவேன் என்றார்.

No comments:

Post Top Ad