குருணாகல் மாவட்டத்தை இதற்காகத்தான் தேர்வு செய்தேன் ! மஹிந்த - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 13, 2015

குருணாகல் மாவட்டத்தை இதற்காகத்தான் தேர்வு செய்தேன் ! மஹிந்தபொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல மாவட்டங்களில் இருந்தும் அழைப்புகள் கிடைத்த போதும், இறுதியாக பல காரணங்களை நோக்காக கொண்டு குருணாகலை மாவட்டத்தை தெரிவு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தலதா மாளிகையில் வைத்து போற்றப்படும் தந்த தாது பூஜிக்கப்பட்ட 4 ராஜதானிகள் குருணாகலை மாவட்டத்தில் உள்ளது.

இதன்காரணமாக அங்கு தெய்வீக ஆசீர்வாதம் நிறைந்துள்ளது என ஹம்பாந்தோட்டை - மீவனபெல பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும், சிலர் தம்மை அச்சம் காரணமாகவே குருணாகலைக்கு சென்றதாக கூறுகிறார்கள்.

ஹம்பாந்தோட்டை மக்கள் தம்மை விரட்டிவிட்டதாகவும் விமர்சிக்கிறார்கள்.

ஆனால், தாம் பிறந்த இடம், மக்களுடன் இணைந்து சேவை புரிந்த இடம் என்பது அவர்களுக்கு தெரியாது என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் இன்னமும், பிரச்சினை இருப்பின் அது பற்றி கவனம் செலுத்துமாறு கோரி காவல்துறை மா அதிபருக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post Top Ad