ரவூப் ஹக்கீம் மூதூர் மக்களுக்கு செய்த துரோகம் ! நடந்தது என்ன ? (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 13, 2015

ரவூப் ஹக்கீம் மூதூர் மக்களுக்கு செய்த துரோகம் ! நடந்தது என்ன ? (வீடியோ இணைப்பு)(அபூ பைஸான்)

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மூதூரின் வேட்பாளனாக யாரை நிறுத்த வேண்டும் என்ற மத்திய குழுவின் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூதூரிலுள்ள ஷாபி ஹோட்டலில் நடைபெற்றது. மூதூர் மத்தய குழுத் தலைவர் முன்னாள் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஹரிஸ் ஆசிரியர் உட்பட பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.  அப்போது புல்மோட்டையை பிறப்பிடமாகவும் , மூதூரில்  வசித்து  வருகின்ற அமீனை தெரிவு செய்வதாக ஒரு சாராரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட டொக்டர் திடீர் தௌபீக்கை தெரிவு செய்ய வேண்டும் என மற்றொரு சாராரும் கூறுகையில் அங்கே இரு சாராருக்குமிடையில் வாக்கு வாதம் முற்றி இறுதியில் கைகலப்பு நடக்கும் அளவிற்கு பிரச்சினை பெரிதாகியது.


இதனைத் தொடர்ந்து இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து மூதூருக்குள் இப்பிரச்சினை்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியின் அதிபரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மூதூர் கிளை தலைவருமாகிய அஷ்ஷேய்ஹ் எம்.சீ.எம்.கரீம் (நத்வி) அவர்கள் இருசாராரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடாத்தி இறுதியில் அனைவரும் ஒன்றாக இணைந்து (மத்திய குழு உட்பட) திடீர் தௌபீக்கை தெரிவு செய்து அவரை மூதூருக்கான வேட்பாளனாக களமிறக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வாக்குறுதியளித்தனர்.

இது இவ்வாறு இருக்க அன்று ஒருநாள் எம்.எஸ் தௌபீக்குடைய கையடக்க தொலைபேசியிலிருந்து அஷ்ஷேய்ஹ் கரீம் (நத்வி) அவர்களுக்கு அழைப்பு வந்தது. அதில் தலைவர் ஹக்கீம் உங்களோடு உரையாட வேண்டுமாம் என்று சொல்ல கரீம் அவர்களிடம் ஹக்கீம் சொன்னதாவது “உள்ளாலும் வெளியாலும் கட்சியினுடைய செல்வாக்கை கூட்டுகின்ற ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் ” என்றிருக்கின்றார். மாஷா அல்லலாஹ் நல்ல விடயம் என்று பதிலளித்திருக்கின்றார் கரீம் (நத்வி) அவர்கள். மீண்டும் ஹக்கீம் தாங்கள் PMGG யுடன் பேச்சுவார்த்தை நடாத்தியருப்பதாகவும் கரீம் (நத்வி) அவர்களிடம் சொல்லியிருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ் நல்ல விடயம் பேசிக்கொள்ளுங்கள் பிரச்சினையில்லை என கரீம்( நத்வி) பதிலளித்திருக்கிறார்கள்.

இதன் பின்னர் தான் தலைவரோடு பேசிய விடயத்தை  என்ன விடயம் பேசப்பட்டது என்பதை சொல்லது பேசியுள்ளதாக மட்டும் கூறி மூதூரிலிருந்து ஹக்கீமிடம் ஒரு குழுவை அஷ்ஸேய்ஹ் கரீம் நத்வி அவர்கள் ஹக்கீமிடம் அனுப்பியிருக்கிறார்கள். அதற்கு ரவூப் ஹக்கீம் அளித்த பதில் யாதெனில் கரீம் ஹஸ்ரத்தோடு மஸூரா செய்துள்ளேன். PMGG யில் போட்டியிடும் டொக்டர் சாஹீர் அவர்களை தேர்தலில் நிறுத்துவதாக் உத்தேசித்துள்ளேம். என்ற அப்பட்டமான பொய்யை சென்ற குழுவுக்கு பதில் கொடுத்து ஏமாற்றத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

எனவே முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரையில் மக்களைப் பற்றிய கவலை கிடையாது அதைத்தான் இவர்களது எண்ணமாகவும் இருந்திருக்கிறது. ரவூப் ஹக்கீமுக்கு மூதூர் மக்களது விருப்பம் பெரிதாகப் படவில்லை அதனால்தான் திடீர் தௌபீக்கை தேர்தலில் நிறுத்த முன்வரவில்லை. ஏனெனில் திடீரை பொறுத்த வரைக்கும் எதற்குமே அஞ்சாத ஒருவர் எந்த உண்மையையும் எவருக்கும் பயமில்லாது வெளியே சொல்லி விடுவார். இதனால் பயந்த ரவூப் ஹக்கீம் தனது கைப் பொம்மையான எம்.எஸ்.தௌபீக்கை வெற்றி பெற வைக்கவேண்டுமாயின் மூதூரில் திடீரை தவிர வேறு யாரையாவது நிறுத்தி தோற்கடிக்க வேண்டும். திடீரை நிறுத்தினால் நிச்சயமாக எம்.எஸ்.தௌபீக் தோற்றுப் போவார். ஆகவே மூதூரில் தோற்றுப்போக எல்லாவற்றிற்கும் பொருத்தமானவர்தான் டொக்டர்.சாஹீர். இதுதான் ரவூப் ஹக்கீமுடைய அரசியல் தந்திரம்.

எனவே இவ்வாறு திட்டமிட்டு சதி செய்த முஸ்லிம் காங்கிரஸூக்கும், தலைவருக்கும்  நிச்சயமாக மூதூர் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக கல்முனை மக்களுக்கு அடுத்தபடியாக மூதூர் மக்கள்தான் இரத்தம் சிந்தி பாடுபட்டார்கள். அப்படியான மக்களுக்கே துரோகம் இழைக்கப்பட்டுவிட்டதெனில் மூதூர் மக்கள் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க கோழைகள் கிடையாது.

நாம் வளர்த்த நாய் நாய்க்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. விட்டு வைத்தால் அனைவரையும் கடித்துக் குதறி விடும் எனவே இந்த வெறி நாயை என்ன செய்யலாம் சற்று சிந்திப்போமா சகோதரர்களே !

நன்றி.


No comments:

Post Top Ad