தனது கட்அவுட்களை அகற்றுமாறு பிரதமர் ரணில் செயலாளருக்கு உத்தரவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 09, 2015

தனது கட்அவுட்களை அகற்றுமாறு பிரதமர் ரணில் செயலாளருக்கு உத்தரவு


தனது உருவப்படம் பொறிக்கப்பட்ட கட்அவுட்களை அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமது உருவப்படத்துடன் கூடிய சகல கட்அவுட்களையும் உடனடியாக அகற்றுமாறு பிரதமர் கோரியுள்ளார்.

100 நாள் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கட்அவுட்கள் மற்றும் ஏனைய கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக இவ்வாறு கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாம் பயன்படுத்தி வரும் குண்டு துளைக்காத வாகனத்திற்கு தேர்தல் காலத்தில் கட்டணம் செலுத்தத் தயார் என ரணில் விக்ரமசிங்க தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad