வாக்காளர்களுக்கு போதைப்பொருள் வழங்கி வாக்குகளைப் பெற முயற்சி ! கபே அமைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 16, 2015

வாக்காளர்களுக்கு போதைப்பொருள் வழங்கி வாக்குகளைப் பெற முயற்சி ! கபே அமைப்புவாக்காளர்களுக்கு போதைபொருள் மற்றும் மதுபானங்களை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொள்ளும் முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.


புத்தளம், பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் சட்டமூலத்தில் இலஞ்ச ஊழலை அதிகரித்தல் குற்றமாக கருதப்படுவதுடன், மதுவரி கட்டளை சட்டத்தின் விதிகளை மீறும் நடவடிக்கை என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு வகையிலாவது பொருட்களை வழங்குதல் தேர்தல் சட்டத்தை மீறும் நடவடிக்கை என்பதுடன் இவ்வாறு மதுபானங்களை பெற்றுக்கொடுப்பதினால் அழுத்தங்களை பிரயோகிக்கும் நடவடிக்கையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுபான வகைகளை இலவசமாக பெற்றுக்கொடுப்பதினால் அதிகமான வாக்காளர்களையும், ஆதரவாளர்களையும் தம்மிடம் ஈர்த்துக்கொள்ளும் வகையில் வேட்பாளர்கள் செயற்படுவது பிரயோக தேர்தலுக்கு முரணானது.
கபே அமைப்பு இந்த செயற்பாடுகள் குறித்து மதுவரி திணைக்களத்திற்கும், தேர்தல்கள் திணைக்களத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் கபே அமைப்பிடம் இன்று வரையில் 244 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 224 முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலும், மிகுதி 20 முறைப்பாடுகள் வன்முறைகள் தொடர்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கெபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post Top Ad