மஹிந்தவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் ! ஐக்கிய தேசிய கட்சி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 15, 2015

மஹிந்தவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் ! ஐக்கிய தேசிய கட்சி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தனது அதிகாரங்கள் மற்றும் வளங்களை நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்வதாக முறைப்பாடு செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் மஹிந்த, தேர்தல் சட்டங்களுக்கு அமைய போட்டியிடவில்லை.
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு உண்டான அதிகாரங்கள் மற்றும் வளங்களை மஹிந்த தேர்தலில் பயன்படுத்துகின்றார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாகனங்கள் உள்ளிட்ட வளங்களை அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றார்.
இந்த விடயங்கள் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் எதிர்ரும் நாட்களில் முறைப்பர்டு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad