ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாது போனதால் கதறியழுத நபர் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 10, 2015

ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாது போனதால் கதறியழுத நபர் (படங்கள் இணைப்பு)கிரீஸ் நாடு ஐரோப்பிய யூனியனிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகிறது.
இதனால், வங்கி தானியங்கி இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கு கிரீஸ் அரசு கடந்த வாரம் கட்டுப்பாடு விதித்தது.

இந்நிலையில், தெசலாநிகி நகரைச் சேர்ந்த கியார்கஸ் சட்சிபோடியாடிஸ்(Giorgos Chatzifotiadis - Age 77) என்பவர் தனது மனைவியின் ஓய்வூதியத் தொகையை கடந்த வாரம் எடுக்க வங்கிக்குச் சென்றார்.
ஆனால் 4 வங்கிகளில் முயற்சி செய்தபோதும் அவரால் 132 அமெரிக்க டொலரை எடுக்க முடியவில்லை.
இதனால் மனம் உடைந்த அவர் வங்கிக்கு வெளியே அமர்ந்தபடி அழுதார். இந்தப் படம் பல்வேறு ஊடகங்களில் வெளியானது.
அவுஸ்திரேலியாவின் ஒரு நிதி நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றும் ஜேம்ஸ் கவுபோஸ்(James Koufos), சிட்னியில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் இந்தப் படத்தை பார்த்தார்.
படத்தில் இருப்பவர் தனது தந்தையின் நண்பர் போல் இருப்பதை அறிந்த அவர், கிரீஸில் வசிக்கும் தனது தாயாரிடம் பேஸ்புக் மூலமாக விசாரித்ததில் அது உண்மை என தெரியவந்தது.
பின்னர் தனது தாயாரின் ஆலோசனையின் பேரில், சட்சி போடியாடிஸுக்கு உதவுவதற்காக ரொக்கத்துடன் கிரீஸ் புறப்பட்டார் கவுபோஸ். மேலும் சட்சிபோடியா டிஸை எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவும்படி பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதவிர சட்சிபோடியாடி ஸுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதற்கு மற்றவர்கள் நிதி உதவி செய்யலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post Top Ad