6 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைகிறது முஸ்லிம் காங்கிரஸ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 11, 2015

6 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைகிறது முஸ்லிம் காங்கிரஸ்எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆறு மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

அதன் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இரண்டு மாவட்டங்களில் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதன்படி, அம்பாறை, கண்டி, புத்தளம், களுத்துறை, கம்பஹா மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முஸ்லிம்காங்கிரஸ் போட்டியிடவுள்ளது. 

வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளது. 

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆறு மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் தலைவர் மனோகணேசன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி , நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post Top Ad