திருமலை மக்கேசர் மைதானத்தில் 5 அடி ஆழத்தில் மனித எலும்புகள் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 08, 2015

திருமலை மக்கேசர் மைதானத்தில் 5 அடி ஆழத்தில் மனித எலும்புகள் (வீடியோ இணைப்பு)

(tw)
திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கில் கடந்த வருடம் 13.02.2014 அன்று மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு நடவடிக்கையின் போது 5 அடி ஆழத்தில் மனித எலும்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்தப் பகுதியை நேரில் பார்வையிட்ட திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவனராஜா அவர்களால் கட்டுமாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டுவதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து இன்றுவரை அதன் கட்டுமாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்தப் பகுதியை பரிசீலிக்கும் பணிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது.
குறித்த பரிசோதனையில் திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமண்ற நீதிபதி T.சரவனராஜா மற்றும் சட்டவைத்திய அதிகாரி, குற்றவியல் தடையப் பொலிஸ் பிரிவினர் உட்பட நில அளவை திணைக்களத்தினர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


No comments:

Post Top Ad