வாக்கெடுப்புக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, July 14, 2015

வாக்கெடுப்புக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு இடம்பெறவுள்ள அனைத்து கட்சிகளினதும் தனிப்பட்ட நபர்களினதும் பிரசார நடவடிக்கைகள் தேர்தல் தினத்துக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அவ்வகையில் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டு அனைத்து பிரசார நடவடிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு செய்யப்படல் வேண்டும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் வௌியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ் அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது - இக்கால எல்லையினுள் எந்தவொரு இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களும் எந்தவொரு அரசியற் கட்சிகளினதும் அல்லது சுயேட்சைக் குழுவினதும் வேட்பாளரை ஊக்குவித்தோ இகழ்த்தியோ எந்தவொரு பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடாது. 

மேலும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியன்று அரசியல் கட்சிகளினதும் மற்றும் சுயேட்சைக் குழுக்களினதும் இறுதி பிரசார கூட்டங்கள் நடைபெறுகின்றமையால் அவை தொடர்பான தகவல்களை மாத்திரம் அடுத்த தினமான 15 ஆம் திகதி பிரசாரப்படுத்த இடமளிக்க முடியும். ஆயினும் 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் வேட்பாளர்கள் பிரசார/ வர்த்தக/ விளம்பர அறிவித்தல்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், கடிதங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பிரசுரித்தலோ அல்லது பிரசாரம் செய்தலோ ஏற்க முடியாத குற்றமாகும். 

அத்துடன் 14 ஆம் திகதி இடம்பெறுகின்ற கூட்டங்களின் அறிக்கைகள் தாமதித்து கிடைக்கப்பெற்றமை காரணமாக அவற்றினை 16 ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளிலோ மற்றைய ஊடகங்களிலோ பிரசுரிப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 

அத்துடன் 15 ஆம் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் அரசியல் தலைவர்கள் வேட்பாளர் பிரமுகர்களின் பிரசாரத்தோடு தொடர்புடைய எவ்வகையான செய்திகளையும் பிரசுரிக்காது, தேர்தல் கோட்பாடுகளுக்கு அமைவாக பணியாற்றி நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்த உதவுமாறு அனைவருக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post Top Ad