40 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதி மீட்பு ! ஒருவர் கைது ! கிளிநொச்சியில் சம்பவம்! (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 11, 2015

40 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா பொதி மீட்பு ! ஒருவர் கைது ! கிளிநொச்சியில் சம்பவம்! (படங்கள் இணைப்பு)


கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாரவெளி பிரதேசத்தில் 38 கிலோ கிராம் கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற விசேட பொலிஸ் குழு, நள்ளிரவு ஒரு மணியளவில் கஞ்சா பொதியுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி சுமார் 40 லட்சத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு, மன்றின் அனுமதியுடன் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post Top Ad