2020 ஆம் ஆண்டில் ஹலால் வரியை நீக்குவதே எமது இலக்கு! ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 10, 2015

2020 ஆம் ஆண்டில் ஹலால் வரியை நீக்குவதே எமது இலக்கு! ஜனாதிபதி


2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்கும்போது ஹலால் வரியை நீக்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதே தமது அரசாங்கத்தின் திர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹலால் வரியின்றி வருடாந்த வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க முடியாது என கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் இருந்து வந்த கருத்து இந்த நாட்டை மிகப்பெரும் தேசிய அழிவை நோக்கிக் கொண்டு சென்றுள்ளதாகவும் எனவே ஹலால் வரி வருமானத்தை நீக்கி திறைசேரியை பலப்படுத்துவதை தமது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதி செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று (09) காலை ஜா-எல நகரசபை மைதானத்தில் நடைபெற்ற “போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு”, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாதத்தைப் பிரகடனம் செய்தல் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி -  சட்டவிரோத போதைப்பொருட்களில் இருந்து அரசியல்வாதிகளை முழுமையாக நீக்குவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் எந்தவொரு அரசியல்வாதியாவது ஈடுபட்டிருந்தால் அல்லது எதிர்காலத்தில் ஈடுபட்டால் கட்சி, நிறம், தராதரங்கள் பாராது அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சகல சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

போதைப்பொருள் ஒழிப்பு, கட்டுப்படுத்தலுக்காக தற்போது இருக்கும் சட்டதிட்டங்களைப் பலப்படுத்தி போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிபெறச் செய்வதற்கு எல்லோரும் உதவ வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் மகாசங்கத்தினர் உட்பட சமயப்பெரியார்களின் உதவிகளையும் எதிர்பார்ப்பதோடு இவ்விடயத்தை எல்லா அரசியல்வாதிகளிடமும் பொறுப்பளிப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, சகல அமைச்சுக்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்களில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பில் ஒரு சிறிய அலகை தாபித்து அரச அலுவலர்களுக்கும் அந்தப் பொறுப்புக்களை வழங்குமாறு குறிப்பிட்டார். 

அதேபோன்று இதற்காக அரசசார்பற்ற நிறுவனங்கள், தனியார்த்துறையினரது உதவிகளையும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கல்வி அமைச்சினூடாக சகல பாடசாலைப் பிள்ளைகளினதும் பங்களிப்பில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான செய்தியை சமூகத்திற்குக் கொண்டு செல்லும் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் குறிப்பிடார். 

சங்கைக்குரிய அத்துரலிய ரத்னதேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், சமயத்தலைவர்கள், ஜோசப் மைக்கல் பெரேரா, எ எச் எம் பௌசி  ராஜித சேனாரத்ன, ஜோன் அமரதுங்க, பீலிக்ஸ் பெரேரா, பண்டு பண்டாரநாயக்க, சாந்த பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் பி பீ அபேகோன் பொலிஸ் மா அதிபர் என் கே. இலங்கக்கோன் ஆகியோர் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.

No comments:

Post Top Ad