திருகோணமலை மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகள், 06 சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுத்தாக்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 13, 2015

திருகோணமலை மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகள், 06 சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுத்தாக்கள்


நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இதுவரை 11 அரசியல் கட்சிகளும் 06 சுயேட்சை குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளன.
வேட்புமனுத்தாக்கலை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (13) பல அரசியல் கட்சிகள் தமக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. 


ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஜக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல கட்சிகள் இவற்றுள் அடங்கும். ஜக்கிய தேசிய கட்சி முன்னாள் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ். தௌபீக் தலைமையிலும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசன்த புஞ்சி நிலமே தலைமையிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.

No comments:

Post Top Ad