காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டார் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, May 02, 2015

காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டார் (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பில் காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று நண்பகல் கல்லடி வாவியோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி றிவைரா விடுதி வீதிப் பக்கமாகவுள்ள வாவியிலிருந்து இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பிரதான வீதி கிரான் பிரசேத்தைச் சேர்ந்த ஞானமணி விதிஸ்தகுமார் (40) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவர் நேற்று காணாமல்போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:

Post Top Ad