ஓகஸ்ட்டில் பொதுத்தேர்தல - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, May 01, 2015

ஓகஸ்ட்டில் பொதுத்தேர்தல


19வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை வெற்றியாகும் என்று தெ இக்கோனோமிஸ்ட் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளர்களால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முழுமையாக ஒழிக்கும் திருத்த திட்டம் வெற்றியளிக்கவில்லை.
எனினும் இறுதியாக 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இந்த திருத்தத்தின் முழுமை வடிவமும் இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு வரவில்லை. பெரும்பாலான திருத்தங்கள் நாடாளுமன்ற அமர்விலேயே விவாதிக்கப்பட்டன.
எனினும் நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்அடிப்படையில் குறித்த திருத்தத்தங்கள் நேரடியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தை தாக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமுடியாது. ஜனாதிபதி நிலைக்கு போட்டியிடுபவர்களின் வயது அதிகரிக்கப்பட்டுள்ளமை என்ற கோத்தபாயவையும் நாமல் ராஜபக்சவையும் பாதித்துள்ளன.
இந்தநிலையில் தேர்தல் சீர்திருத்தமும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமையால் பொதுத்தேர்தல் பெரும்பாலும் ஓகஸ்ட் மாதத்திலேயே இடம்பெறும் என்று தெ இக்கோனோமிஸ்ட் சஞ்சிகை எதிர்வுகூறியுள்ளது.

No comments:

Post Top Ad