முஜிபுர் ரஹ்மானின் பிரே­ர­ணையால் மேல்­மா­காண சபையில் அம­ளி­து­மளி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 30, 2015

முஜிபுர் ரஹ்மானின் பிரே­ர­ணையால் மேல்­மா­காண சபையில் அம­ளி­து­மளிஇலஞ்சஇ ஊழல் ஒழிப்பு ஆணைக்­கு­ழு­வுக்கு எதி­ராக கோத்­த­பாய ராஜ­பக்ஷவின் ஆத­ர­வா­ளர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­தின்­போது திரி­பு­ப­டுத்­தப்­பட்ட தேசி­ய­க்கொடி ஏந்­தப்­பட்­ட­மைக்கு அரசு துரித நட­வ­டிக்கை எடுக்கக் கோரி மேல்­மா­காண சபை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்­கிற பிரே­ர­ணை­யொன்று முஜிபுர் ரஹ்மானால் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதனால்  சபையில் பெரும் அம­ளி­து­மளி ஏற்­பட்­ட­மையால் சபை நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.


நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கூடிய மேல்­மா­காண சபையின் போது ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னரால் கொண்­டு­வ­ரப்­பட்ட இப்­பி­ரே­ர­ணையால் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டது. இந்­நி­லையில் குறித்த தேசிய கொடி விவ­கா­ரத்தை சபையில் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­து­வதா? இல்­லையா? என்­பது தொடர்பில் வாக்­கெ­டுப்பு நடத்த அவை தவி­சாளர் தீர்­மா­னித்தார். இதன்­படி வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்டு இப்­பி­ரே­ரணை தோல்­வி­ய­டைந்­தது.

முஜிபுர் ரஹ்­மானால் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசிய கட்சிஇ ஜன­நா­யக மக்கள் முன்­னணிஇ ஜாதிக ஹெல உறு­மய மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரேம சந்­திரன் ஆகியோர் வாக்­க­ளித்­தனர். ஆத­ர­வாக 24 வாக்­கு­களும் எதி­ராக ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் 31 பேரும் வாக்­க­ளித்­தனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் இரு­வரும் இப்­பி­ர­ரணை கொண்­டு­வ­ரப்­பட்ட போது சபையில் இருக்­க­வில்லை. அத்­துடன் ஐ.தே.க. உ­றுப்­பினர் எஸ்.எம். மரிக்கார்இ ஜ.ம.மு. உறுப்­பினர் மனோ கணேஷன்இ சு.க.உறுப்­பினர் நௌசர் பவுஸிஇ அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறுப்­பினர் பாயிஸ் ஆகியோர் அன்­றைய தினம் அமர்­விற்கு வரு­கை­த­ர­வில்லை. இந்­நி­லையில் 7 வாக்­கு­களால் குறித்த பிரே­ரணை தேல்­வி­ய­டைந்­தது.

இப்­பி­ரேரணை வாக்­க­ளிப்­புக்கு விடப்­பட்­ட­போ­திலும் இது தொடர்பில் சபையில் தொடர்ந்தும் அமை­தி­நிலை ஏற்­ப­ட­வில்லை. ஆளும் தரப்­பினர் தொடர்ச்­சி­யாக இப்­பிரேரணை தொடர்பில் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தனர். இதனால் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இதனால் சபையில் அமளிதுமளி நிலைமை ஏற்பட மாகாண அமர்வு எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள அறிவிக்கப்பட்டது. 

No comments:

Post Top Ad