தி/மூ/ஆலிம்சேனை வித்தியாலய கணிதவாரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களையும் , கற்றபித்த ஆசிரியர்களையும் பரிசளித்து கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 30, 2015

தி/மூ/ஆலிம்சேனை வித்தியாலய கணிதவாரப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களையும் , கற்றபித்த ஆசிரியர்களையும் பரிசளித்து கௌரவிக்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)(அபு பைஸான்)

மூதூர் வலயக்கல்வி பணிப்பாளரின் சுற்று நிரூபத்துக்கு அமைவாக சென்ற வாரம் கணிதப் போட்டிகள் மூதூர் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் மிக மும்முரமாக நடைபெற்றது. மூதூர் கல்வித்துறையில் இது பெரும் சாதனையாகும்.


அந்த வகையில் ஆலிம் சேனை வித்தியாலயத்தில் வகுப்பு ரீதியான கணிதப் போட்டிகள் மிக தீவிரமாக நடைபெற்றது. இப்போட்டிகளை தி/மூ/ஆலிம் சேனை     வித்தியாலயத்தின் கணிதப் பாட ஆசிரியர் உட்பட ஏனைய ஆசிரியர்களும் இதனை நெறிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும்,கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டும் நிகழ்வு வித்தியாலயத்தில் இன்று (2015-04-30 வியாழக்கிழமை காலை 9.00மணி)அதிபர் எம்.ஐ.ஏ வாஜித் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பி.ரி.எம்.பைசர் அவர்களும் ää சிறப்பு விருந்தினராக மூதூர் வலயக்கல்வி பணிமனையின் கணதப்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹஸன் அவர்களும் பெற்றார்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும்ää மதப் பெரியார்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பிரதம விருந்தினர் தனது உரையில் இப்பாடசாலை அண்மைக் காலமாக முன்னேற்றம் அடைந்து வருவதனையும் இப்பாடசாலையின் பெற்றோர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும எனவும், எதிர்காலத்தில் இப்பாடசாலை சமூகத்திற்கு தன்னால் முடியுமான சேகைளையும் செய்வதற்கு முன் வருவேன் எனவும் , இப்பாடசாலையின் அதிபர் சிரேஷ்ட அதிபராகவும் இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களும்,அதிபரும்; மேலதிக நேரங்களை அர்ப்பணிப்புச் செய்து வருகின்றனர் எனவும், இங்கு கற்பிக்கின்ற கணிதப்பாட ஆசிரியர் எனது ஆசானாகவும், அவா் தி/மூதூர் மத்திய கல்லூரியில் நீண்ட காலம் சேவையாற்றி 13 வருடங்களின் பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இரு மாணவர்களை சித்தியடையச் செய்து சாதனை படைத்தார் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் தனது உரையில்..
மூதூர் கல்வி வலயத்தில் திஃமூஃஆலிம்சேனை வித்தியாலயம் சிறிய பாடசாலையாக இருந்தாலும் கணிதவார நிகழு;வுகளை மிகச் சிறப்பான முறையிலே நடாத்தி முடித்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இங்கு கற்றல் செயற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருவதை வித்தியாலய அதிபர் வாஜித்; அவர்கள் பாடசாலையின் தேவைகள் பற்றி அடிக்கடி வலயக்கல்விப் பணிப்பாளரோடும் என்னோடும் அடிக்கடி வந்து தேவைகளைப் பெற்றுச் செல்லக் கூடியவராகவும் காணப்படுகிறார்,அத்துடன் கணிதம் கற்பிக்கக்கூடிய றஹீம் ஆசிரியர் மூதூர் மத்திய கல்லூரியில் கடமையாற்றுகின்றபோது 2011ம் ஆண்டில் என்.எம் கபீல் மாணவனை கணித ஒலிம்பியாற் போட்டியில் வெற்றி பெறச்செய்தவர் எனவே இப்பாடசாலையில் அவரும் ஏனைய ஆசிரியர்களும் ஒற்றுமையாக செயற்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. என்று குறிப்பிட்டார்.
மேலும் கணிதவார போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் கற்பித்த ஆசியர்களுக்குமான பரிசுப் பொதிகளை மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பி.ரி.எம்.பைசர் அவர்களாலும்,உதவிக்ல்விப் பணிப்பாளுர் ஹஸன் அவர்களாலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad