முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஒத்துழையுங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, January 09, 2015

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஒத்துழையுங்கள்
இலங்கையின் வடகிழக்கு மாகாண முஸ்லிம்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள்,ஆட்கடத்தல்,கொலை மற்றும் கொள்ளைச்  சம்பவங்கள் நாம் பல்வேறு தகவல்கள் மற்றும் ஆவணங்களைச் சேகரித்துள்ளோம்.


அதன் அடுத்த கட்டமாக 1985 முதல் 2010 இடம்பெற்ற மேற்படியான சம்பவங்கள் தொடர்பில் இலங்கை உயர்நீதி மன்றத்தில் கருணா , பிள்ளையான் மற்றும் இவர்கள் மீது எதுவித சட்டநடவடிக்கையும் எடுக்காமல் துணைபோன மஹிந்த ராஜபக்ஷ,பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய மீது வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்.

ஆகவே எமது இந்தச் செயற்திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து ஆலோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை எதிர்பார்க்கின்றோம். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சட்ட மற்றும் நிபுணர்கள் இந்த வேலைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே புதிதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

உங்கள் கருத்துக்களுக்கு..
VOICE FOR JUSTICE AND HUMANITY
(LONDON BRANCH)
LEGAL ADVISOR
FAHMY MOHAMED
EMAIL :- FARHAN191004@GMAIL.COMNo comments:

Post Top Ad