அவதானமாக இருக்கவும் ! அசாத் சாலி வேண்டுகோள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, January 10, 2015

அவதானமாக இருக்கவும் ! அசாத் சாலி வேண்டுகோள்ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகத்துடன் அல்லது பாதுகாப்பு தரப்புடன் சண்டை மூட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என  மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தரப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகத்துடன் அல்லது இராணுவம் பாதுகாப்பு தரப்புடன் சண்டை மூட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ள அசாத் சாலி அவர்கள், இது தொடர்பாக பாதுகாப்ப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வரும் தினங்களில் முஸ்லிம்கள் மற்றும் தமிழ்மக்களை மிக அவதானமாவும் நிதானமாகவும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post Top Ad