நாளைய தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது ! அரசாங்கம் ஐ.நாவுக்கு பதில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 07, 2015

நாளைய தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது ! அரசாங்கம் ஐ.நாவுக்கு பதில்

(ad)

நாளைய ஜனாதிபதித் தேர்தலை அமைதியானதாகவும் நம்பிக்கைக்குரியதாகவும் நடத்தி முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. 


ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இவ்வாறு கூறியுள்ளது. 

1931ம் ஆண்டிலிருந்து இதுவரை இலங்கையில் நடத்தப்பட்ட தேர்தல்கள் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

அதன்படி, நாளை நடைபெறவுள்ள தேர்தலில் மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவென வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post Top Ad