தேர்தல் நடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபடவில்லை ! தேர்தல் ஆணையாளர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

தேர்தல் நடவடிக்கைகளை குழப்பும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபடவில்லை ! தேர்தல் ஆணையாளர்


இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளாற் போன்று தற்போது நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை இன்று (08) இரவும் நாளையும் (09) குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர் என்று வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சற்று முன்னர் தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குறித்த பாதுகாப்புப் படையினர் எனது அல்லது பொலிஸாரின் வேண்டுகோளுக்கமைய மட்டுமே பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாணத்தின் தீவுகள்- மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் கடல் அல்லது வான் பிரயாணத்தை மேற்கொள்ளும் நிமித்தம் கடற்படையினரதும் விமானப்படையினரதும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் திடீர் அனர்த்தம் ஏற்படின் உடனடியாக அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தேவையேற்படின் வட மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மேலதிக பாதுகாப்புப் படையினரின் சேவை பெறவும் அப்பிரதேசங்களில் பணியில் இருந்த பொலிஸார் தேர்தல் பாதுகாப்புக் கடமைக்காக சென்றுள்ளமையினால் அவ்விடங்களுக்கும் மாற்றுப் பாதுகாப்புப் படையினரை நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுதவிர வேறெந்த இடங்களுக்கும் பாதுகாப்புப் படையினர் அழைக்கப்படவில்லை. எனவே தேர்தல் நடவடிக்கையை குழப்புவதற்கு பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று பரவும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad