புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கின்றேன் ! அலரி மாளிகையை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, January 09, 2015

புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கின்றேன் ! அலரி மாளிகையை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதிமக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையை விட்டு சற்று முன்னர் வெளியேறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, உரையாடியதன் பின்னர் ஜனாதிபதி வெளியேறியுள்ளார்.

மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  புதிய ஜனாதிபதியின் கடமைகளுக்கு தடை ஏற்படுத்த விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதி கடமைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவித்து மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.

No comments:

Post Top Ad