மைத்திரி,மஹிந்த இருவரும் வாக்களித்தனர் (படங்கள்+வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

மைத்திரி,மஹிந்த இருவரும் வாக்களித்தனர் (படங்கள்+வீடியோ இணைப்பு)பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று ஆரம்பமானது.
இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்களிப்பதற்காக 15044490 வாக்காளர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.
தபால் மூல வாக்களிப்பு குறித்த முடிவுகள் இன்று இரவு 10.00 மணியளவில் அறிவிக்கப்பட உள்ளது.
காலையில் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பு
மேல் மாகாணத்தில் இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்தவுடன் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை காலமும் மக்கள் காலை நேரத்தில் மந்தகதியிலேயே வாக்களிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக மேல்மாகாணத்தில் குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்தவுடனேயே கூட்டமாகச் சென்று நீண்ட வரிசையில் நிற்பதனைக் காணக்கூடியதாகவுள்ளது.
மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால வாக்களிப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்திலும், எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை புதியநகர் வித்தியாலோக விஹாரையிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தில் வாக்களித்தார்.
No comments:

Post Top Ad