நான் போகிறேன் ! சொந்த ஊருக்கு புறப்பட்டார் மஹிந்த - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, January 09, 2015

நான் போகிறேன் ! சொந்த ஊருக்கு புறப்பட்டார் மஹிந்தபதவியிழந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள தமது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கொழும்பில் இதுவரை அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்த அவரது உடைகள் மற்றும் பாவனைப் பொருட்கள் அவசர அவசரமாக அங்கிருந்து பொதி செய்யப்பட்டு மெதமுலன இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Bin Bag ஆகப் பயன்படுத்தப்படும் கறுப்பு பைகளிலே அவை அவசர அவசரமாகச் சேகரித்துக் கட்டப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றி மெதமுலனவுக்கு அனுப்பப்பட்டன.
மெதமுலனவில் உள்ள ராஜபக்‌ஷவின் குடும்ப இல்லத்தில் இறக்கப்பட்டு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன.
இதுவரை காலமும் ஜனாதிபதி என்ற முறையில் கொழும்பு அலரி மாளிகை இல்லத்துக்கு அருகில் இருந்து ஹெலிக்கொப்டர் மூலமும் மெதமுலனவுக்குச் சென்று வந்த மஹிந்த ராஜபக்‌ஷ தம்பதியினர் இன்று தமது காரில் கொழும்பிலிருந்து ஊருக்குப் புறப்பட்டனர்.
ஜனாதிபதிக்குரிய பாதுகாப்புத் தொடரணியை அவர் இன்னும் மீளக் கையளிக்காமையால் அந்த வாகனத் தொடரணியிலேயே தற்போது அவர் ஊருக்குப் புறப்பட்டார்.
தம்முடைய தரப்பில் பயன்படுத்தப்படும் மேலதிக வாகனங்களையும் அவர் விரைவில் புதிய அரசிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மெதமுலனவில் ராஜபக்‌ச தரப்பினரை வரவேற்பதற்கு சிறிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.No comments:

Post Top Ad