பட்டாசுகள் வெடித்து அமைதியை குழப்புவோர் கைது செய்யப்படுவர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

பட்டாசுகள் வெடித்து அமைதியை குழப்புவோர் கைது செய்யப்படுவர்

(vi)
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மிகவும் சமாதானமாகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கு பின்னர் யாரும் அமைதியை குழப்பும் வகையில் செயற்பட முடியாது. குறிப்பாக ஊர்வலங்கள் செல்லவோ பட்டாசுகள் வெடிக்கவோ முடியாது. அவ்வாறு யாரும் செயற்படுவார்களாயின் உடனடியாக கைது செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இன்று துப்பாக்கி சூட்டு சம்பவங்களோ அல்லது தாக்குதல் சம்பவங்களோ இடம்பெறவில்லை. எனினும் 14 சிறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad