பொலிஸ் பாதுகாப்புடன்-மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 07, 2015

பொலிஸ் பாதுகாப்புடன்-மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 வது ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில் மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்ää மாவட்ட தெரிவத்தாட்சி அலுவளருமான திருமதி. பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உட்பட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளுடன் வாக்களிப்பு நிலைய தேர்தல் அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் உரிய நிலையங்களை சென்றடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்களில் நாளை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் செயலகத்தின் உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம்.கபீர் கூறுகின்றார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதி 199 ää கல்குடா தேர்தல் தொகுதி 115 ääபட்டிருப்பு தேர்தல் தொகுதி 100 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  3 இலட்சத்து 65 ஆயிரத்து 163 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:

Post Top Ad