திருமலை மாவட்டத்தில் 2,56,852 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, January 07, 2015

திருமலை மாவட்டத்தில் 2,56,852 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி


திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலிற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான மேஜர் ஜெனரல் ரி திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா தெரிவித்தார்.
திருமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 285 வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் உத்தியோகத்தர்கள் சகிதம் பொலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் 07.01.2015 காலை முதல் அனுப்பிவைக்கப்பட்டன.

இம்முறை திருமலை மாவட்டத்தில் 2,56,852 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். 28 வாக்கெண்னும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 7 தாபல் மூல வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படும்.

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் அனுராதபுர சந்தி விபுலானந்தாக்கல்லூரி என்பன வாக்கெண்னும் நிலையங்களாக செயற்படும்.

நாளை (08.01.2015) மாலை 5.30 மணியளவில் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்னும் நிலையங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டதுடன் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் நள்ளிரவு 1.30 மணியளவில் முடிவுகளை தேர்தல் ஆணையாளரிற்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post Top Ad