முதலாவது தேர்தல் முடிவு இன்று இரவு 10.30 - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

முதலாவது தேர்தல் முடிவு இன்று இரவு 10.30

(vi)
இடம்பெற்று முடிந்த 7 ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுகளுக்கான முதலாவது பெறுபேற்றை இன்று இரவு 10.30 மணிக்கு முன்னர் எதிர்பார்க்கலாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்களிப்பு தினமான இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் 328 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 
இவையாவும் பாரிய சம்பவங்கள் தொடர்பானது அல்ல. என்றாலும் தேர்தல்களுடன் தொடர்புடையவையாகும். அவைதொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்.
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பெறுபேறுகளில் தபால்மூல வாக்குப்பதிவுகளுக்கான பெறுபேறுகளில் முதலாவது பெறுபேற்றை இன்று இரவு 10.30 மணிக்கு முன்னர் எதிர்பார்க்கலாம்.
அது தபால் மூல முடிவாக அமையும் என்றும் ஏனைய வாக்களிப்பு முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும் இறுதி முடிவு வெளியாவது எப்போது என்று கூற முடியாதென்றும் இறுதி முடிவு வெளிவர நாளை காலையோ, மதியமோ அல்லது மாலையோ ஆகலாம்.
தேர்தல் காலத்தில் பிரசாரத்தின் போது  நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை கவலை அளிக்கிறது. பலியான நபரின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
தேர்தல் முடிவு வெளிவரும் போது தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம். தேர்தல் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், பொலிஸார், ஊடகவியலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. 
வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லப்படும் போது மாற்றப்படும் அல்லது வாக்குச்சீட்டுகள் கள்ளத்தனமாக மாற்றப்படும் என்றெல்லாம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை. அவை முழுப்பொய்யான பிரசாரங்கள். 
தேர்தல் செயலகத்தை விசேட அதிரடிப்படையினர் சூழ்ந்துள்ளதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை. தேர்தல் செயலகம் பாதுகாப்பாகவே உள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad