வெற்றிக்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ! மஹிந்தவுக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தில் பஷீர் சேகுதாவூத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 30, 2014

வெற்றிக்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ! மஹிந்தவுக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தில் பஷீர் சேகுதாவூத்


(vi)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்ட  இறைவனிடம் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான  பஷீர் சேகுதாவூத்  தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திங்கட்கிழமை (29) மாலை  அனுப்பிவைத்துள்ள தனது இராஜினாமா கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நாட்டு மக்களை பாதுகாப்பதில் விஷேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு  இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது  நம்பிக்கை வைத்துள்ளதுடன், கட்சியின் முடிவுக்கு அமையவே நான் வெளியேறுகின்றேன்

எமது கட்சி எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  முஸ்லிம் மக்களிடையே எமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய்யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே நான்  இராஜினாமா செய்கின்றேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கை இன்மை காரணமாகவோ நான் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்யவில்லை. நாட்டுப்பற்றுள்ள பிரஜையாக அனைத்து மக்களுக்கிடையிலும்; ஐக்கியத்தை ஏற்படுத்தவும் ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்கமுடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கை எதிலும் நான் ஈடுபடப்போவதில்லை. அமைச்சராக இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்கமுடியாத நிலை ஏற்பட்டமையையிட்டு கவலையடைகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad