நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிரிசேனவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு-படங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 28, 2014

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிரிசேனவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு-படங்கள்(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்ääஎதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க 27-12-2014  சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.


அங்கு விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நல்லாட்சியை நோக்கிய ஆட்சிமுறை மாற்றத்தில் பங்காளிகளாவோம் எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிரிசேனவை ஆதரித்து காத்தான்குடி கபுறடி சந்தியில் இடம்பெற்ற 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ வெளியீடான புதிய நாளை பத்திரிகையின் முதற்பிரதி எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மானினால் வழங்கி வைக்கப்பட்டது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும்ää புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிரிசேனவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ääஐக்கிய தேசியக் கட்சியின் உதவித் தலைவரும்ääபாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநயக்கää ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேää ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எஸ்.எஸ்.பி.மஜிட் ää நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க்  ம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமிää நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர். நஜா முஹம்மத்ää நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழுலுல் ஹக்ääஅஷ்ஷெய்க் சபீல் நளீமி உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஜக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் கட்சி முக்கியஸ்தர்கள் ääஆதரவாளர்கள்ääபெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post Top Ad