வெள்ளத்தினால் மூழ்கியுள்ள மூதூர் (வீடியோ இணைப்பு) (updated) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 28, 2014

வெள்ளத்தினால் மூழ்கியுள்ள மூதூர் (வீடியோ இணைப்பு) (updated)நாடு முழுவதும் தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கின்ற மழை காரணமாக   இலங்கையின் பல இடங்களில் திறந்து விடப்பட்டுள்ள குளங்களின் வான் கதவுளினால் மூதூர் பாரிய வெள்ள அனர்த்தத்துக்கு முகம்கொடுத்ததுள்ளது.


நேற்று வரைக்கும் மூதூரின் ஷாபி நகர்,கைரியா நகர் ஆகிய இடங்களே வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் நேற்று நள்ளிரவு தொடக்கம் மூதூரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்தும் நீர்மட்டம் உயர்ந்து செல்வதினால் மீதமுள்ள மூதூரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறி மூதூரிலுள்ள பல பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அசாதாரண சூழ்நிலை சம்பந்தமான விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad