மஹிந்த மறுத்ததைப் பெறவே ஹக்கீம் மைத்திரியோடு இணைந்தார் ! பொதுபல சேனா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 30, 2014

மஹிந்த மறுத்ததைப் பெறவே ஹக்கீம் மைத்திரியோடு இணைந்தார் ! பொதுபல சேனா


ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்­து­விட்ட முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான கரை­யோர மாவட்ட நிர்­வாக அல­கினைப் பெற்றுக்கொள்­வ­தற்கே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அர­சி­லி­ருந்து விலகி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்டு எதி­ர­ணி யில் இணைந்­துள்ளார்.

அந்த உடன்­ப­டிக்கை உட­ன­டி­யாக பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் வேண்­டுகோள் விடுத்தார்.
கொழும்பு கிரு­லப்­பனை பெளத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் மேற்­கண்ட வேண்­டு­கோளை விடுத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, இந்­நாட்டை இன ரீதியில் துண்­டாட ஹக்­கீ­முக்கு ஒரு போதும் நாம் இட­ம­ளிக்க மாட்டோம். எமது உயிர்­களை தியாகம் செய்­தா­வது இதைத்­த­டுக்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். ஹக்கீம் கல்­முனை சம்­மாந்­துறை பொத்­துவில் பிர­தே­சங்­களை இணைத்து முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அல­கொன்­றினை ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யி­ருந்தார். அவ்­வாறு நாட்டைப் பிரிக்க முடி­யாது என்று ஜனா­தி­பதி மறுத்­து­விட்டார். ஜனா­தி­பதி வழங்க மறுத்­ததைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் சேர்ந்­துள்ளார். கல்­மு­னையில் நடந்த கூட்­டத்தில் ஹக்கீம் இதனைப் பகி­ரங்­க­மா­கவே கூறி­யுள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு
13ஆவது திருத்­தச்­சட்­டத்தை பொது­ப­ல­சேனா எதிர்க்­கி­றது. இந்­நாட்டில் உள்­ளூ­ராட்சி முறை இல்­லாது ஒழிக்­கப்­பட வேண்டும். மைத்­தி­ரி­பால சிறி­சேன வடக்கு கிழக்கை இணைப்­ப­தற்கு உறு­தி­ய­ளித்­துள்ளார். இவ்­வாறு வடக்கு கிழக்கு இணைக்­கப்­ப­டு­வது மிகவும் ஆபத்­தா­ன­தாகும். இது பிரி­வி­னைக்கே வழி­வ­குக்கும். இதனால் இந்­தி­யாவின் அர­சி­யலும் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளாகும்.
மேற்­கத்­தேய நாடு­களின் நிகழ்ச்சி நிர­லுக்­கேற்ப மைத்­தி­ரி­பால சிறி­சேன குழு­வினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். மேற்­கத்­தேய நாடுகள் தமது நிகழ்ச்சி நிர­லுக்கு இலங்­கையைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ளன. நாட்டின் ஒரு­மைப்­பாடு பற்றி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டில்லை. நாட்டைத் துண்­டா­டு­வ­தற்கு பல தூது­வ­ரா­ல­யங்­க­ளூ­டாக மில்­லியன் கணக்­கான டொலர்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.
சர்­வ­தேச சூழ்ச்சி
சர்­வ­தேச சூழ்ச்­சிக்கு அமை­வாக இலங்­கையில் லிபியா ஈராக் சிரியா எகிப்து மற்றும் ஆப்­கா­னிஸ்தான் நாடு­களில் போன்ற நிலை­மையை உரு­வாக்­கு­வ­தற்கே ஹக்கீம் அர­சி­லி­ருந்து விலகி எதி­ர­ணியில் இணைந்­துள்ளார். அவர் இவ்­வாறு செயற்­ப­டுவார் என்று பொது­ப­ல­சேனா 2 வரு­டங்­க­ளுக்கு முன்பே எதிர்வு கூறி­யி­ருந்­தது.
2002ஆம் ஆண்டு அர­சி­யலில் பெரிய மாற்­ற­மொன்று ஏற்­பட்­டது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­விக்கு வந்தார். அக்­கா­லத்தில் தமிழ் ஈழ விடு­தலைப் புலி­க­ளுடன் சமா­தான உடன்­ப­டிக்­கை­யொன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. தமிழ் ஈழ விடு­தலைப் புலி­க­ளுக்கு தனி­யான அல­கொன்­றினை வழங்­கு­வதே அதன் நோக்­க­மாகும். இந்த உடன்­ப­டிக்­கையின் பின்­ன­ணி­யிலும் சர்­வ­தேச சூழ்ச்­சியே இருந்­தது. இன்றும் அதே போன்­ற­தொரு சூழ்ச்­சியே இடம்­பெ­று­கி­றது. 2002ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஒரு தனி அலகு வழங்­கி­யது போன்று தமி­ழர்­க­ளுக்கு தனி­யான பிரி­வொன்றும் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யான அல­கொன்றும் வழங்­கு­வதே சர்­வ­தே­சத்தின் நிகழ்ச்சி நிர­லாகும். மேற்­கத்­தேய சக்­தி­க­ளுக்கு இந்த நிகழ்ச்சி நிரல் தேவைப்­ப­டு­கி­றது. 2002ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட சூழ்ச்­சியின் இரண்டாம் கட்­டமே இது.
இர­க­சிய ஒப்­பந்­தங்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸு­டனும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பு­டனும் மைத்­தி­ரி­பால சிறி­சேனா தரப்­பினர் செய்து கொண்­டுள்ள இர­க­சிய ஒப்­பந்­தங்கள் நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் இந்த இர­க­சிய ஒப்­பந்­தங்கள் நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்கும் இன ஐக்­கி­யத்­திற்கும் பாது­காப்­புக்கும் ஆபத்­தா­ன­தாகும்.
தலைவர் இல்­லாத நாடு
சர்­வ­தேச சக்­திகள் மேற்­கத்­தேய நாடுகள் இலங்­கையில் தலைவர் இல்­லாத ஒரு ஆட்­சியை உரு­வாக்­கவே முயற்­சிக்­கின்­றன. தலைவர் இல்­லாத நாட்டை சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு கொள்­ளை­ய­டிக்க முடி­கி­றது. எகிப்து சிரிய ஈராக் போன்ற நாடு­களில் இந்­நி­லை­மையை காண முடி­கி­றது. இது மேற்­கத்­தேய நாடு­களின் செய­லாகும்.
நாட்டைப் பாது­காக்க வேண்டும்
அதி­க­மான தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து ஒரு அணி­யினை ஆரம்­பித்­தி­ருப்­பதால் அவர்­களால் நாடு நாச­மாக்­கப்­பட்டு விடும். சிங்­கள பெளத்­தர்கள் இந்நிலைமையை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சக்திகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க முன்வந்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் விசேடமாக சிங்கள பெளத்தர்கள் நாட்டைப் பாதுகாக்க முன்வந்துள்ள மஹிந்தவை ஆதரித்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.
ஹக்கீமும் தூய நாளை அமைப்பும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையும் என்னவென்று பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றார். நிகழ்வில் பொதுபலசேனாவின் நிர்வாக பணிப்பாளர் டிலன்ந்த விதானகேயும் உரையாற்றினார்.

No comments:

Post Top Ad