ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் - அங்காடி வியாபாரிகள்ääநகர சபை தொழிலாளிகளுடன்-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் -விஷேட சந்திப்பு-(படங்கள்.) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, December 28, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் - அங்காடி வியாபாரிகள்ääநகர சபை தொழிலாளிகளுடன்-பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் -விஷேட சந்திப்பு-(படங்கள்.)(பழுலுல்லாஹ் பர்ஹான்)


2015 ஜனாதிபதி தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள அங்காடி வியாபாரிகள்ääநகர சபை தொழிலாளிகள்ääகூலித் தொழிலாளிகள்ääதனியார் வாகனங்களின் சாரதிகள் ஆகியோருடனான
விஷேட சந்திப்பொன்று 28-12-2014 நேற்று சனிக்கிழமை காத்தான்குடியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும்ää மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட சந்திப்பில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள பெரும் திரளான அங்காடி வியாபாரிகள்ääநகர சபை தொழிலாளிகள்ääகூலித் தொழிலாளிகள்ääதனியார் வாகனங்களின் சாரதிகள் உட்பட காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எம்.அஸ்பர்ääகாத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர்ääசியாட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ் விஷேட சந்திப்பில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள அங்காடி வியாபாரிகள்ääநகர சபை தொழிலாளிகள்ääகூலித் தொழிலாளிகள்ääதனியார் வாகனங்களின் சாரதிகள் ஆகியோரின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வின் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதுடன் 2015 ஜனாதிபதி தேர்தலில்  ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும்; விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விஷேட உரை நிகழ்த்தினார்.No comments:

Post Top Ad