வேடர்குடியிருப்பு,தாழங்குடா,மண்முனை ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு-படங்கள். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, December 30, 2014

வேடர்குடியிருப்பு,தாழங்குடா,மண்முனை ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு-படங்கள்.(பழுலுல்லாஹ் பர்ஹான்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி திவிநெகும       திணைக்களத்தினால்மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இதற்கமைய ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேடர்குடியிருப்புääதாழங்குடாääமண்முனை ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 1100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 29-12-2014 நேற்று திங்கட்கிழமை வேடர்குடியிருப்பு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகத்திலும்ääதாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்திலும்ääமண்முனை 153 ஏ பல நோக்கு சமூக மண்டபத்திலும் இடம்பெற்றது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்ääபொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு 1100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பீ.குணரட்னம்ääஉதவிப் பணிப்பாளர் மனோஹிதராஜ்ääவாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில்ääபிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முஹம்மட் றுஸ்வின் ää ஆரையம்பதி பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எஸ்.சிவலிங்கம் உட்பட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ் 1800 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதியில் அரிசிääசீனிääபால்மாääமீண் டின்ääபருப்புääபிஸ்கட் ääமாääதேங்காய் உள்ளிட்ட பொருட்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad