அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களுக்கான அவசர வேண்டுகோள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 01, 2014

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உறுப்பினர்களுக்கான அவசர வேண்டுகோள்அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தேகாரோக்கியத்தைத் தந்து அவனின் தீனின் பக்கம் மக்களை அழைக்க நல்லருள் பாலிப்பானாக!
உலகில் சமகாலத்தில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் விடயங்களெல்லாம் நியாய மனதோடு உள்ள மக்களை பயம் கொள்ளச் செய்கிறது. அதே போன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் அசாதாரண நிகழ்வுகளும் ஏதோ ஒரு பயங்கரச் செய்தியை அறியத்தருவது போல் இருக்கிறது.

வட்டி, விபச்சாரம், போதைப் பொருள், கொலை, கொள்ளை, துஷ்பிரயோகங்கள் போன்ற பெரும்பாவங்கள் பெருகி தலை விரித்தாடுகின்றன. அப்பாவச் செயல்கள் மலிந்து விட்டால் அல்லாஹ்வின் தண்டனைகள் நல்லோரையும் கெட்டவர்களையும் சேர்த்துக் கொள்ளும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
இந்நிலையில் சன்மார்க்க அறிஞர்களாகிய எங்கள் மீது ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
அதற்காக மக்களை நன்மையான காரியங்கள் செய்வதின் பக்கமும், பாவங்களில் இருந்து தௌபா செய்வதின் பக்கமும் தூண்டுவதும் வலியுறுத்துவதும் மிகவும் இன்றியமையாத ஒரு காரியமாகும். இந்த விடயங்களில் ஊர் பிரமுகர்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோரின் ஒத்துழைப்புகளை பெற்று குத்பா பிரசங்கங்கள், உபந்நியாசங்கள் மற்றும் விஷேட பயான்கள் மூலம் இப்பணியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்’ என்றும் கூறினேன். ‘(அப்படிச் செய்வீர்களாயின்)அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.’ அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும் புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான், இன்னும் உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான் உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.”
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமூகத்திலிருந்து பாவச் செயல்கள் அகலவும், நாம் செய்யும் நற்கருமங்களை பொருந்திக் கொள்ளவும் செய்வானாக!

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post Top Ad